search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளை விடும் விழா"

    • மாடு முட்டி 32 பேர் காயம்
    • 250 காளைகள் பங்கேற்று ஓடியது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா யாதவர் வீதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது.

    விழாவிற்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பழனி முத்து மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் கலந்து கொள்ள ஆந்திர மாநிலம் நெல்லூர்பேட்டை மற்றும் ஜோலார்பேட்டை, பர்கூர், திருப்பத்தூர், வாணியம் பாடி, பரதராமி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 250 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின.

    அப்போது பாதைகளில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர் களில் 4 பேர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டனர். இளைஞர்கள் விசிலடித்து மாட்டின் மீது கையை போட்டு உற்சாகப்படுத்தி ஓட வைத்தனர். முதல் பரிசாக ரூ.77 ஆயிரத்து 777, இரண்டாம் பரிசாக ரூ.55 ஆயிரத்து 555 உள்ளிட்ட 51 பரிசுகள் வழங்கப்பட்டன.

    பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியதால் காளைகள் ஓடுவதற்கு வழிதெரியா மல் திருவிழா கடைகளுக்குள்ளும், பிரியாணி இருந்த குண்டாக்கள் மீதும் முட்டி மோதியது.

    பள்ளிகொண்டாபோலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் தூக்கிச் சென்று சரமாரியாக தாக்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • காளை விடும் விழா நடந்தது
    • 300 காளைகள் பங்கேற்றன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு 49-ம் ஆண்டு காளை விடும் விழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காளைவிடும் விழா விழாவில் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். 

    விழாவில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    வெற்றி பெற்ற 72 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், எர்த்தாங்கல் ஊராட்சி பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • காளை விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.கொட்டாய் கிராமத்தில் முத்து மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆம்பூர், அணைக்கட்டு, வேலூர் காட்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

    காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்று அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டி தள்ளியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளித்தனர். பின்னர் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பு நிலவழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எருது விடும் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • 7 காளைகள் பங்கேற்க தடை
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை, வெள்ளக்குட்டை, யர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 காளைகள் கொண்டு வரப் பட்டிருந்தன. அதில் 7 காளை கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    எருது விடும் விழாவை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். கந்திலி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.மோகன்ராஜ், அ. தி.மு.க. நகர செயலாளர் டி. டி.குமார், முன்னாள் எம். எல்.ஏ. டி.கே.ராஜா, ரமேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலை வர் திருமதி கலந்து கொண்ட னர்.

    கோட்டாட்சியர் லட்சுமி, வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். துணை போலீஸ் சூப்பி ரண்டு கணேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப் பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றி ருந்தவர்கள் காளைகளை உற்சாகப்படுத்தினர்.

    அப்போது காளைகள் முட் டியதில் 16 பேர் காயமடைந்த னர். குறைந்த நேரத்தில் வேக மாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசாக ரூ.77 ஆயிரம் முதல் 40 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளை ஞரணியினர், எருது விடும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • மாடுகள் முட்டி 50 பேர் காயம்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு 37ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்க ளிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா கேரளா மாநிலங்களிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் விழியாக துள்ளி குதித்து ஓடியது.

    இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2-ம் பரிசாக 65 ஆயிரம் ரூபாய், 3-வது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் உள்ளிட்ட 68 பரிசுகள் வழங்கப்பட்டது.

    காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க ஆரணி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாளை நடக்கிறது
    • வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தி லிருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமத்தில் 24-ம்தேதி 55-ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு வேகமாக ஓடி முதலிடம் பெறும் காளைக்கு ரொக்கமாக முதல் பரிசு ரூ 75 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.65 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ 55 ஆயிரம் உள்பட பல்வேறு காளைகளுக்கு 55 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    காளை விடும் திருவிழா நடைபெற உள்ள தெருவில் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் தாலுகா போலீசார் செய்துள்ளனர்.

    • கல்வீச்சில் சப்-கலெக்டரின் பின்பக்க கண்ணாடி மற்றும் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் நாட்றம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்த 180-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் காளை விடும் விழா நடத்தப்படும் என விழா குழுவினர் நோட்டீஸ் விநியோகம் செய்திருந்தனர். இதனால் ஏராளமான காளைகள் பங்கேற்றன.

    கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின. இருபுறமும் நின்ற இளைஞர்கள் ஆரவாரம் செய்து காளைகளின் முதுகில் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த மாடு விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

    மதியம் 2.30 மணிக்கு மேல் மாடு விடும் விழா நடத்தக் கூடாது என விழா குழுவினரிடம் போலீசார் கூறினர். இதனால் மாடு விடுவது நிறுத்தப்பட்டது. அதிக காளைகள் பங்கேற்றதால் 2-வது சுற்று ஓடுவதற்கு காளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இதனால் பரிசுகள் வாங்க முடியாமல் காளைகளின் உரிமை யாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆவேசம் அடைந்த ஒரு சில காளையின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை மட்டும் போட்டியில் கலந்து கொண்டு வருவதற்கு அனுமதிக்குமாறு விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    தாசில்தார் தலைமையில் அதே இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது திடீரென காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. சற்றும் எதிர்பார்க்காத மக்கள் அங்குமிங்கும் வேகமாக சிதறி ஓடினர். கூட்டத்தில் ஓடிய பொதுமக்களை காளை முட்டி தூக்கி வீசியது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    ஜோலார்பேட்டை பெரிய கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் முஷாரப் (வயது 19) என்பவரை காளை முட்டியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை கண்டித்து கல்நார்சம்பட்டி கோவில் எதிரே மறியல் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த சப்-கலெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர் தங்களிடம் இருந்த வீடியோ பதிவை காட்டி வாலிபர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் நடந்த கல்வீச்சில் சப் கலெக்டரின் பின்பக்க கண்ணாடி மற்றும் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது.

    மேலும் போலீஸ்காரர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் 10 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதனால் கல்நார்சம்பட்டி கிராமம் போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பலியான வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க வாலிபரின் சொந்த ஊரான பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் ஏ.டி.எஸ்.பி. புஷ்பராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பொது சொத்துகளை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவன் உள்பட 36 பேரை கைது செய்தனர். அவர்களை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது சிறுவன் வேலூர் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை
    • போலீசார் மீது காளைகளை அவிழ்த்து விட்டனர்

    திருப்பத்தூர்:

    நாட்டறம்பள்ளி அருகே வாலிபர் மாடு விடும் விழாவில் பலியான சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கல்நார்சாம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழாவில் மொத்தம் 200 மாடுகள் ஓடுவதற்கு அட்டை வழங்கப்பட்டு அதில் 150 மாடுகள் மட்டும் நேற்று மதியம் 2.30 மணி வரை ஓடவிடப்பட்டது. பின்னர் விழா குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க 2-வது சுற்றுக்கு செல்லாத காரணத்தால் 3 மாடுகள் மட்டும் 2.45 மணிக்கு மீண்டும் தாசில்தார் உத்தரவின் பேரில் ஓட அனுமதி வழங்கப்பட்டது

    . பின்னர் விழா குழுவினர் எருதுவிடும் விழா முடிவடைந்ததாக அறிவித்தனர். அதனை ஏற்றுக்கொள்ளாத சில மாடுகளின் உரிமையா ளர்கள் தங்களுடைய மாடுகள் ஓட அனுமதி கோரியதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதனால் அங்கிருந்த மாட்டின் உரிமையாளர்களில் ஒரு சிலர் மாடுகளை வேண்டும் என்றே போலீஸ் மற்றும் மக்கள் நின்று இருந்த ஓடுபாதையில் அவிழ்த்து விட்டனர். பாதையில் இருந்தவர்கள் கலைந்து ஓடினர்.

    பின்னர் சில நிமிடங்கள் கழித்து இடது பக்கத்தி லிருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் காயம்பட்டிருந்த ஒருவரை தூக்கி வந்தனர். அவரை பற்றி விசாரித்த போது முஷ்ரப் என்றனர்., அவரை உடனடியாக சிகிச்சைக்காக புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கெர்ணடு செல்லப்பட்டார். அங்கு அவருடைய வலதுபக்க வயிற்று பகுதியில் 4x2 சென்டிமீட்டர் அளவிற்கு குத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மருத்துவ தகவலறிக்கையில் பதிவு செய்து உள்ளனர். மேலும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதன் காரணமாக சம்பவ இடத்தில் இருந்த மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓட அனுமதிக்காததன் காரணமாக காவல்துறை தாக்கியதால் தான் இறந்ததாக பொய்யான தகவலை பரப்பினர்

    இதன் காரணமாக விழா குழவினர் வருவாய்த்து றையினர் மற்றும் காவல்து றையினர் காயம்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் கல்நார்சாம்பட்டி நடுநிலைப்பள்ளி உள்ளே திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப் போது சுமார் 300 பேர் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் ஆயுதப்படை காவலர் திருமால் என்பவருக்கு வலதுபக்க கண்புருவத்தில் காயம் ஏற்பட்டது.

    தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    • 200 மாடுகள் பங்கேற்பு
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தில் 108-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே வி குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.

    காளைகள் ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்ட ருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன. இந்த காளை விடும் திருவிழாக்குழு தலைவர் சிவபிரசாத், செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார்.இந்தப் போட்டிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் தாசில்தார் எம். விஜயகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் குசிலகுமாரி சேகர் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா உமா காந்தன், துணைத் தலைவர் வேலு, ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் காயமடைந்த வர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வி.மத்தூர் கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • திருவிழாவை வேடிக்கை பார்த்துக் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலசப்பாக்கம்:

    கலசப்பாக்கம் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்று வருகின்றன. விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் காளை விடும் விழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கலசப்பாக்கம் அடுத்த குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    கீழ பாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் காளை விடும் திருவிழா நடந்தது. காளை விடும் விழாவை பார்ப்பதற்காக கார்த்தி கீழ்பாலூர் பகுதிக்கு சென்று வருவதாக மனைவி குமாரிடம் கூறிவிட்டு சென்றார்.

    அப்போது கார்த்தி ஒரு ஓரமாக நின்று கொண்டு காளை விடும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தன.

    அப்போது திடீரென காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி மீது எதிர்பாராத விதமாக அவரை முட்டி தள்ளியது. இதில் கார்த்தி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கார்த்தி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×